விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த 4 ஆம் தேதி முதல் வரும் 10 ஆம் தேதி வரை எஃகு அமைச்சகத்தால் அனுசரிக்கப்படும் ஐகானிக் வாரத்தின் ஒரு பகுதியாக ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த வாரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘எஃகு நுகர்வு அதிகரிப்பு: முன்னேற்றத்தை நோக்கி எஃகு பயன்பாடு’ என்ற கருத்தரங்கம், விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆர்ஐஎன்எல்- இன் 80 நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது தவிர, நிறுவனத்தின் 22 வெளிமாநில சந்தைப்படுத்தல் அலுவலகங்களில் இருந்து 60 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பிரதானமாக எஃகு உற்பத்தி / நுகர்வு, இந்தியாவில் எஃகு நுகர்வு குறைவாக இருப்பதற்கான காரணங்கள், எஃகு நுகர்வு மற்றும் கிராமப்புற முன்முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எஃகு நுகர்வு குறித்த துறை வாரியான பகுப்பாய்வுடன் கருத்தரங்கம் தொடங்கியது. இந்தியாவில் எஃகு நுகர்வு குறைவாக இருப்பதற்கான காரணிகள் மற்றும் அதை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
திவாஹர்