மத்திய சுற்றுலா மற்றும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திருஅஜய் பட், மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து 6ந்தேதி அன்று ஆய்வு செய்தார். சுற்றுலா அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் கியான் பூஷன், நொய்டாவின் ஹோட்டல் மேலாண்மைக்கான தேசிய கவுன்சிலின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திரு அஜய் பட் தேசிய மற்றும் உலக அளவில் இந்தியாவில் ஹோட்டல் மேலாண்மை கல்வி செயல்திறன் மற்றும் தரவரிசையை பாராட்டி ஊக்குவித்தார். வருங்காலங்களில் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் நிதி பலம் மேம்படும் என்று அவர் வலுவான நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்