குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் இன்று( ஜுலை 9, 2022) ‘மை ஹோம் இந்தியா‘ ஏற்பாடு செய்திருந்த இளைஞர் சம்மேளனத்தில் பங்கேற்று சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், எந்த நாட்டிலும் இளைஞர்கள் தான் தற்காலமும், எதிர்காலமும் ஆக உள்ளனர் என்றார். அவர்களது அறிவாற்றலும், திறமையும், நாட்டிற்கு பெருமிதம் தேடித்தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே, இன்றைய இளைஞர்கள் தான், எதிர்கால வரலாற்றைப் படைப்பவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகிலேயே வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா தான் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைத்தான், நிலப் பரப்புக்கேற்ற மக்கள்தொகை என்று கூறுவார்கள். இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது என்றும் அவர் கூறினார்.
நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார். பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்திய பூமி, பல்வேறு நாகரீகங்கள் மற்றும் பாரம்பரியங்களை சிறப்பித்து வருவதாகவும் அவர் கூறினார். மை ஹோம் இந்தியா அமைப்பு, அதன் பல்வேறு முன்முயற்சிகள் வாயிலாக, தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை பரப்பி வருவதாகவும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
திவாஹர்