மத்திய அரசு மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளில் புதிய கல்விக் கொள்கையும் ஒன்று என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளில் புதிய கல்விக் கொள்கையும் ஒன்று என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.பெங்களுருவில் உள்ள தனியார் கல்லுhரியில் பவளவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழி கல்விக்கு புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் அது உதவிடும் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்றும், எனவே பெண்களுக்கு கல்வியில் சம உரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply