ஹரியானா பகுதியில் வடக்குப் புறஎல்லை சாலை என்றும் அறியப்படுகின்ற துவாரகா விரைவுச்சாலை இந்தியாவின் முதலாவது உயர்மட்ட நகர்ப்புற விரைவுச் சாலையாக மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
29 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த விரைவுச்சாலை தில்லியில் உள்ள துவாரகாவையும், ஹரியானாவில் உள்ள குருகிராமத்தையும் இணைக்கிறது. ரூ.9,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்தச் சாலையில் 19 கிலோமீட்டர் ஹரியானாவிலும், எஞ்சிய 10 கிலோமீட்டர் தில்லியிலும் அமைந்திருக்கும்.
துவாராகா விரைவுச்சாலை அமைக்கப்படுவதால், 12,000 மரங்கள் மாற்று இடங்களில் பெயர்த்து நடப்பட்டதாக திரு கட்கரி கூறினார். 34 மீட்டர் அகலமுள்ள எட்டு வழி நெடுஞ்சாலையில் ஒரு நதியின் நடுவே ஒற்றைத்தூண் மட்டும் பொருத்தி, பொறியியல் துறையிலும் தனித்துவ சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திவாஹர்