மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. இன்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரிக் கரையில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீரின் வேகம் அதிகம் காரணமாக கோட்டையூர் அடிப்பாலாறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.

எஸ்.திவ்யா

Leave a Reply