முதன்முறையாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றும், வளர்ந்து வரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் மோதி கூறியுள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் பதிவுக்கு அளித்துள்ள பதிலில் பிரதமர் கூறியிருப்பதாவது:
பிவி சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றதற்காக நான் வாழ்த்துகிறேன். அவர் மீண்டும் தனது அபாரமான விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளார். இது நாட்டிற்கு பெருமையான தருணம், மேலும் வளரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
எம்.பிரபாகரன்