விஞ்ஞான யுகத்தில் போராடி வரும் சர்க்கஸ் கலைஞர்கள்!-திருச்சியில் முகாமிட்டுள்ள கிரேட் பாம்பே சர்க்கஸ்!

பார்வையாளர்களை கவரும் வண்ணம் ‘கிரேட் பாம்பே சர்க்கஸ்’ திருச்சி ‘ஜி’ கார்னர் மைதானத்தில் ஜூலை 19 முதல் துவக்கப்பட உள்ளது.

அந்தரத்தில் பறக்கும் `ப்ளே டிரிபிள்’ எனப்படும் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கை வாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கஸில் இடம்பெறுகின்றன.

மேலும், எட்டு பந்துகளை இரண்டு கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ்வேர் எனப்படும் கப்பன் சாசர் விளையாட்டு, ஜோக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கஸில் சிறப்பு அம்சமாக இருக்கும்.

வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகச விளையாட்டுக்களை நிகழ்த்த உள்ளனர்.

கிளி, புறா மற்றும் நாய்கள், பல்வகையான வித்தைகளை காட்டி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் வதைத் தடுப்பு, வன விலங்கு பாதுகாப்பு மற்றும் இந்திய பிராணிகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு தன்னார்வலர்களின் கெடுபிடி காரணமாக, தற்போது எந்த சர்க்கஸ் நிகழ்ச்சிகளிலும் சிங்கம், புலி, யானை, கரடி, ஒட்டகம் போன்ற எந்த விலங்குகளும் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் இந்த “கிரேட் பாம்பே சர்க்கஸ்” கம்பெனி நடத்தும் நிகழ்ச்சிகளிலும் விலங்குகள் இடம் பெறுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி, செல்போன், இன்டர்நெட், இணையதளம் மற்றும் யூடியூப், முகநூல்.. போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சியால் உலகமே தற்போது உள்ளங்கையில் அடங்கி விட்டது.

ஆனாலும், இன்றைய சூழலில் இதுபோன்ற சர்க்கஸ் கம்பெனிகள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் தொடர்ந்து போராடி வருவது உண்மையிலுமே பிரமிக்க வைக்கிறது.

சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இது போன்ற சர்க்கஸ் கம்பெனிகளுக்கு உதவிட வேண்டும்.

இதுபோன்ற சர்க்கஸ் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க மாணவர்களும், இளைஞர்களும், இன்றைய தலைமுறையினரும் ஆர்வமுடன் முன்வர வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply