உளவுத்துறை ஐ.ஜி.ஆசியம்மாள் அதிரடி மாற்றம்!

செந்தில் வேலன் // ஆசியம்மாள்

DIPR-IPS-Tranfers-Postings-Date-20.07.2022-2

DIPR-IPS-Tranfers-Postings-Date-20.07.2022-1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்திலும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வரலாறு காணாத வன்முறை சம்பவங்களுக்கும் காவல்துறையின் அலட்சியமும், மெத்தனமும், மாவட்ட நிர்வாகத்தின் கவன குறைவும், காலதாமதமும் தான் முக்கிய காரணமாகும்.

குறிப்பாக இவ்விவகாரத்தில் நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டிய மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கடைசி வரைக்கும் அந்தப் பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமே விசுவாசமாக நடந்து கொண்டார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இவற்றையெல்லாம் மிக நுணுக்கமாகவும், நுண்ணறிவோடும் முன்கூட்டியே மோப்பம் பிடித்து எச்சரித்து இருக்க வேண்டிய உளவுத்துறை, இந்த விவகாரத்தில் ஏனோ தெரியவில்லை முற்றிலும் செயல் இழந்து விட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவரையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும், மாவட்ட கல்வி அதிகாரியையும் அதிரடியாக மாற்றம் செய்த தமிழக அரசு, தற்போது உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாளையும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. ஆசியம்மாளுக்குப் பதிலாக உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், பணியிட மாற்றமும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, ஈரோடு மாவட்டம் பவானி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், ஆகியோர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதே போல சென்னை பூக்கடை இணை கமிஷனர் மகேஸ்வரன் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், ஆவடி ஆயுதப்படை எஸ் பி ராதாகிருஷ்ணன் சென்னை சைபர் கிரைம் இணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆகியோர் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீத்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply