விடுதலைப் போராட்ட வீரர்களான லோகமான்ய திலகர் மற்றும் சந்திர சேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனதின் குரல் நிகழ்ச்சியில் லோகமான்ய திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் குறித்து அவர் பேசியிருந்ததையும் பிரதமர் பகிர்ந்தார். லோகமான்ய திலகர் உடன் நெருங்கிய தொடர்புள்ள லோகமான்ய சேவா சங்கத்திற்கு தனது மும்பை பயணத்தின் போது சென்றிருந்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்தார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகள் வாயிலாக பிரதமர் தெரிவித்ததாவது:
“பாரதத் தாயின் இரண்டு தலை சிறந்த வீரத்திருமகன்களான லோகமான்ய திலகர் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோரை அவர்களது பிறந்தநாள் அன்று அவர்களை வணங்குகிறேன். இந்த இரு ஆளுமைகளும் தீரம் மற்றும் நாட்டுப்பற்றின் உதாரணமாக திகழ்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களைப் பற்றி நான் பேசியதை பகிர்கிறேன்.”
“மக்களிடையே கலாச்சார உணர்வை ஊட்டிய பிரம்மாண்டமான கணபதி உற்சவங்கள், லோகமான்ய திலகரின் என்றும் அழியாத மரபுகளில் ஒன்று. ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது லோகமான்ய திலகர் உடன் நெருங்கிய தொடர்புள்ள லோகமான்ய சேவா சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டேன்.”
எஸ்.சதிஸ் சர்மா