சர்வதேச புலிகள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளையொட்டி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த எட்டாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புலிகள் சரணாலயம் ஒன்பதிலிருந்து, 52-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மக்கள் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் தமிழகத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புலிகளை பாதுகாக்கும் முன்னோடி முயற்சியாக வரும் அக்டோபர் 17 முதல் 19-ஆம் தேதிவரை, சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து உலகளாவிய புலிகள் உச்சிமாநாடு நடைபெறும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்