மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர், இன்று (29.07.2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினர்.
வெளிநாட்டு தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 25 ஆம் தேதி தாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் சர்வதேச தூதுக்குழுவினராக மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். இருநாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பரஸ்பர பயணங்களுடன், இந்தியாவும், மொசாம்பிக்கும் நெருங்கிய நட்புறவை கொண்ட நாடுகளாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.
திவாஹர்