திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில், காலை 9 மணியளவில் ரோகிணி என்ற யானை சரிந்து விழுந்து இறந்தது. அந்த யானைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டாக்டர் சதாசிவம் இன்று காலை யானைக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது, ரோகிணி யானை சிகிச்சையின் போது மயங்கி விழுந்து இறந்தது.
உள்ளூர் கால்நடை மருத்துவர், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட யானைக் குழு முன்னிலையில் நெறிமுறையின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
26 வயதுடைய ரோகிணி என்ற யானைக்கு சுவாசக் கோளாறு, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, பல் சரியாக சீரமைக்கப்படாததால் மாஸ்டிக் பிரச்னை போன்ற உடல் நலப் கோளாறுகள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும், என்று வனத்துறை தரப்பில் தெரிவித்தனர்.
எம்.பிரபாகரன்