தமிழகத்தில் புத்தொழில் திட்டத்தால் இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளது!-மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தில் புத்தொழில் திட்டத்தால் இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு புத்தொழில் மதுரை வட்டார மைய தொடக்க நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் புத்தொழில் வட்டார மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்ததை அடுத்து தற்போது அதனை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக கூறினார்.மாநிலத்தில் அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் திரு பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply