உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் தடகளப் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கத்தைக் கைபற்றியுள்ளது.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“தேஜஸ்வின் ஷங்கர் வரலாறு படைத்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளின் தடகளப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை அவர் வென்று தந்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது முயற்சியால் பெருமிதம் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். அவர் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கட்டும்.”

திவாஹர்

Leave a Reply