75வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்தியாவின் மூவர்ணக்கொடி செயற்கைக் கோள் மூலம் விண்வெளியில் பறக்கவிடப்படும்!- இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் வரும் 7ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்தியாவின் மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து காலை 9.18 மணிக்கு சிறிய ராக்கெட் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் திரு. சோம்நாத் தெரிவித்துள்ளார்.சிறிய வகை ராக்கெட்டுகளை வர்த்தக முறையில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, விண்வெளியில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரோ மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிடுகிறது. இந்த ராக்கெட்டுடன் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 750 மாணவிகளின் பங்கேற்புடன் கூடிய அஸாதிசாட் செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்படுகிறது.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடும் இத்தருணத்தில், மாணவிகளை அறிவியல் துறையில் ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திவாஹர்

Leave a Reply