உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானங்களை விமானப்படை தலைமைத் தளபதி பெங்களூருவில் பறக்கவிட்டார்.

விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.  இலகுரகப் போர்விமானம்  (எல்சிஏ) தேஜாஸ், இலகுரக காம்பேட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்),  ஹிந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40 (எச்டிடி-40) ஆகிய மூன்று உள்நாட்டு தயாரிப்புகளை அவர் பறக்கவிட்டார். இவை தற்சார்பு இந்தியாவை  நோக்கிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளனன.

எல்சிஎச்  மற்றும் எச்டிடி-40 ன் திறன்கள் மற்றும் தேஜாஸ் புதுப்பிப்புகளை விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வுசெய்தார். தற்போதைய நிலைமை  மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் புரிந்துகொள்ள வடிவமைப்பாளர்கள் மற்றும் சோதனைக் குழுவினருடன் அவர் உரையாடினார்.

விமானப்படை தலைமைத் தளபதி, 2022 ஆகஸ்ட் 06 அன்று, ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே நினைவு உரையை நிகழ்த்தினார். இதில் இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம்  மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் தயாராக இருக்கும் போர்ப்படையாக  மாற்றுவதற்கு  இந்திய விமானப்படையின் திறன் மற்றும் படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி  பேசினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply