கரை புரண்டு ஓடும் காவிரி!-பவானியில் வெள்ளப்பெருக்கு!-கள நிலவரம்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி கலக்கும் முக்கூடல் சங்கமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் க.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

படங்கள் : ஆர்.சிராசுதீன், க.மணிகண்டன்.

Leave a Reply