காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“தனித்துவமான பி வி சிந்து சாம்பியன்களின் சாம்பியன் ஆவார். தனது தனித்திறனை மீண்டும் மீண்டும் அவர் வெளிப்படுத்துகிறார். அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் உறுதி வியக்கவைக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். எதிர்கால போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply