பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூவர் அடங்கிய உலக அமைதிக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐநாவுக்கு மெக்ஸிக்கோ ஆலோசனை.

பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட மூவர் அடங்கிய உலக அமைதிக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐநாவுக்கு மெக்ஸிக்கோ ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் Andres Manuel Lopez எழுத்து பூர்வமாக ஐநாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த அமைதிக் குழுவில் ஐநா பொதுச்செயலாளர் Antonio Guterres போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ் ஆகியோரின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு, உலக அளவிலான அமைதி நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.போர் அபாயம் ஏற்படக்கூடிய சூழலில், இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தத்திற்கான வழிவகைகளை இந்த ஆணையம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதிக்கான இந்த ஆணையத்திற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply