இந்திய எஃகு ஆணையம் 2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது, மேலான செயல்பாடுகளால் 16% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய எஃகு ஆணையம், 2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதன் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் நிறுவன செயல்பாடுகளின் வருவாய் வளர்ச்சி 16.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் எஃகு ஆணையம் மிகச் சிறந்த உற்பத்தியையும் பதிவு செய்துள்ளது.

2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக உள்ளீடு செலவுகள், உலகளவிலும், உள்நாட்டிலும் குறைந்த அளவிலான தேவைகள் ஆகிய இரட்டை சவால்கள் நிறுவனத்தின் செயல்திறனை பாதித்தன. இறக்குமதி செய்யப்பட்ட கோக்கிங் நிலக்கரியின் விலை அதிகரிப்பால், ஏற்பட்ட உற்பத்தி செலவு நிறுவனத்தின் வளர்ச்சியை பாதித்தது. உலகளாவிய தேவை, எஃகு விலையில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டு சந்தை மற்றும் விலை நிர்ணயம் ஆகியன நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022 ஏப்ரலில் எஃகு விலை அதிகரித்ததிலிருந்து, தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளது.

திவாஹர்

Leave a Reply