இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே திரைப்பட கூட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், திரைப்பட கூட்டு தயாரிப்புக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும்.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான கலை மற்றும் கலாச்சாரத்தை பரிமாறிக்கொள்ளவும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் இது உதவிடும்.
எம்.பிரபாகரன்