சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.வனங்களில் வசிக்கும் மென்மையான ராட்ஷதர்கள் என்று அழைக்கப்படும் யானைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த விலங்காக கருதப்படுகிறது.
நீண்ட வாழ்நாள் கொண்ட யானைகள், அதன் புத்திக்கூர்மைக்கும், வாழ்வியல் தன்மைக்கும் பெயர்பெற்றவை. வனங்களுக்கு அழகு சேர்க்கும் யானைகள், அழிந்து வருவது உலக அளவில் கவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், ஐநா அமைப்பு சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினத்தை அறிவித்தது.
இந்நாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த எட்டாண்டுகளாக இந்தியாவில் யயானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ஆசிய யானைகள் எண்ணிக்கையில், இந்தியாவில் 60%யானைகள் வசிப்பதாக அவர் கூறியுள்ளார்.
வனப்பகுதிகளின் அருகே வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் மனித – விலங்கு மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகவும், மக்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரம்பரிய பாதுகாப்பு முறைகளை கையாளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
திவாஹர்