காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று கலந்துரையாடினார்.
புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது நரேந்திர மோதி அவர்களுக்கு விருந்தளித்தார்.
பதக்கம் வென்றவர்களின் சாதனையை கண்டு நாடு பெருமை கொள்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பர்மிங்ஹாமில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
எஸ்.சதிஸ் சர்மா