வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவது நம் அனைவரின் கடமை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
விடுதலை பெருவிழாவின் ஒரு பகுதியாக தில்லியில் நேற்று ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அகில இந்திய மோட்டார் சைக்கிள் பேரணியை அவர் தொடங்கி வைத்து பேசினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளைச் சேர்ந்த வாரிசுகளை கவுரவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தை நாடுகொண்டாடும் போது பல்வேறு துறைகளில் உச்சத்தை அடையும் வகையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திவாஹர்