புத்தாக்கத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்! -மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.

புத்தாக்கத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.இதுதொடர்பான பேரணியை மும்பையில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.

இந்த தொழில்துறையின் வளர்ச்சி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புத்தாக்க தொழில்துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 6 மண்டலங்களில் இந்த பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

மாவட்டந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புத்தாக்க தொழில் தொடர்பாக சிறப்பு படைப்புகளை வழங்கும் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என்றும் திரு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply