தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் முதல் முறையாக அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது “மரபு அரிசிகள் – அருந்தானியங்கள்” அடங்கிய பெட்டகத்தையும் முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
Home of Chess என்ற புத்தகத்தையும் அவர் வழங்கினார்.
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தங்கரையும் முதலமைச்சர் இன்று காலை சந்தித்து வாழ்த்து தெரிவித்து Home of Chess புத்தகத்தை பரிசளித்தார்.
கே.பி.சுகுமார்