ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லாது!-சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகலும்!-ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையும்!-இ.பி.எஸ்- இன் அடுத்த கட்ட நடவடிக்கை!

Hon’ble Dr. Justice G. JAYACHANDRAN.

downloaded-54_watermarked-1

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதிமுகவில் ஜூன் 23-க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் இன்று (17.08.2022) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வெளியானதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்குமா? என்பது தெரியவில்லை.

ஆம், இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி கே. பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடுவார் என்று தெரிகிறது.

இறுதியாக உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவை பொருத்து தான் அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-யின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்டும். அதுவரை அதிமுக தொண்டர்களின் நிலை ஐயோ பரிதாபம்..!

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply