விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் முதல் விமான சேவையை கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 27ம் நாள் பிரதமர் தொடங்கி வைத்தார். சாதாரண மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இத்திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 21ம் நாள் தொடங்கப்பட்டது. அதன்படி, 2வது மற்றும் 3வது தர நகரங்கள் விமானப் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு 74 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், உடான் திட்டத்தின் மூலம் தற்போது அது 141 ஆக அதிகரித்துள்ளது.
உடான் திட்டத்தின் கீ்ழ் 68 செயல்படாத விமான நிலையங்கள் இணைக்கப்பட்டன. 425 புதிய வழித்தடங்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டன. 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வரை இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.
2026ம் ஆண்டுக்குள் 1000 வழித்தடங்களுடன் 220 விமான நிலையங்கள்/ ஹெலிபோர்ட்டுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திவாஹர்