மக்களுக்கான சுகாதாரப் பணிகளை நிறைவேற்றுவதில், மத்திய அரசின் நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன், காணொலிக் காட்சி வாயிலாக உரையாடிய அவர், சுகாதாரம் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்தார்.வட்டார அளவிலிருந்து சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மருத்துவ பணிகளின் முக்கிய கட்டமைப்புக்கு முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை கோவிட் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.மக்களுக்குத் தேவையான தரமான சுகாதார சேவைகளை அளிப்பதில், மாநிலங்களுக்கு உதவுவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு. மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
திவாஹர்