2022, ஜூலை மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்: அதிக புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம்!

2022,  ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை 1986-87=100) 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக உள்ளது. அரிசி, கோதுமை- ஆட்டா, கம்பு, தானியங்கள், பால், மீன் வெங்காயம், பச்சை/ காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொது குறியீட்டு உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்தக் குறியீட்டு உயர்வு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது.  விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  20 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 13 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், 1301 புள்ளிகளுடன் தமிழகம் பட்டியலில் முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

திவாஹர்

Leave a Reply