ஹைட்ரஜன் உணர்திறன் மற்றும் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சிக்காக, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஹைட்ரஜன் புத்தொழில் நிறுவனத்துக்கு ரூ.3.29 கோடி நிதியுதவியை மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

ஹைட்ரஜன் உணர்திறன் மற்றும் பகுப்பாய்வு தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சிக்காக, மகாராஷ்டிராவை சேர்ந்த ஹைட்ரஜன் புத்தொழில் நிறுவனங்களுக்கு, ரூ.3.29 கோடி நிதியுதவியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

டாக்டர்.ஜிதேந்திரசிங் பேசும்போது, கடந்த ஆண்டு 75-வது சுதந்திரதினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில், செங்கோட்டையிலிருந்து தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின்கீழ், ஹைட்ரஜன் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தேசிய ஹைட்ரஜன் இயக்கம், அதன் பருவநிலை இலக்குகளை எட்டுவதையும், இந்தியாவை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற அரசாங்கத்துக்கு உதவி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது 2030-ம் ஆண்டுக்குள், 5 மில்லியன் டன் ஹைட்ரஜன் உற்பத்தியை செய்யவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தவும் உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply