குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் வெற்றிக்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக கோவாவில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார்.
நாடு முழுவதும் 10 கோடிக்கும் கூடுதலான ஊரகக் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த 3 ஆண்டுகளுக்குள் 7 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பது சாதனை அளவாகும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். மக்கள் பங்களிப்புடன் மகளிர் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியே இந்த திட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்த வெளி கழிவறை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
70 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகள் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்