சுதந்திரமான, உள்ளார்ந்த மற்றும் அமைதிக்கான இந்தோ-பசிபிக் கட்டமைப்பை உருவாக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள அவர், பாங்காக்கில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் மாணவர்கள் இடையே இந்தோ – பசிபிக் குறித்த இந்தியாவின் பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிழக்கத்திய நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்த அவர், இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் நாடுகளையும் கடந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக கூறினார்.
ஆசியான் கூட்டமைப்பு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்த அவர் இந்தோ-பசிபிக் மண்டலமும் வலுப்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் நாடுகளுக்கிடையே பரஸ்பரம் உள்ள வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வது மற்றும் சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய கடல்சார் நாடுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
திவாஹர்