நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் புவிசார் மாற்றங்களை மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! -உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் புவிசார் மாற்றங்களை மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுதில்லியில் நேற்று தேசிய மாணவர் படை கருத்தரங்கில் நிறைவுரையாற்றிய அவர், எல்லைப்புற மாவட்டங்களில் உடனுக்குடன் தகவல்களை பெறுவதற்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்புக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு அமித் ஷா எந்தவொரு சவாலையும் மத்திய அரசுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஜம்மு கஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.பாதுகாப்பு விஷயத்தில் மாநிலங்களோடு ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல புதிய சட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply