உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை போர் கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2-ஆம் தேதி பணியில் இணைக்கப்படும்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை போர் கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2-ஆம் தேதி பணியில் இணைக்கப்படும் என்று இந்திய கடற்படையின் கமோடோர் தாப்பர் தெரிவித்துள்ளார்.40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட போர் விமானங்களை தாங்கிச்செல்லும் கப்பல்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய போர் கப்பல்களை வடிவமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கப்பலில் 2 ஆயிரத்து 200 அறைகள் உள்ளன. பெண் அதிகாரிகள் மற்றும் அக்னி வீரர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply