2022 அக்டோபர் 22 முதல் அக்டோபர் 31 வரை இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படவுள்ள தூய்மை பிரச்சாரம் 2.0 மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தின் முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.

மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர், 2022 அக்டோபர் 22 முதல் 2022 அக்டோபர் 31 வரை இந்திய அரசால் நடத்தப்படவுள்ள, தூய்மை பிரச்சாரம் 2.0 மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு பிரச்சாரத்திற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், 2022 அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இந்திய அரசாங்கத்தின் அமைச்சகங்கள், துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு பிரச்சாரத்துடன் தூய்மை பிரச்சாரம் 2022-ஐ அரசாங்கம் அறிவித்தது. சிறப்பு பிரச்சாரம் 2.0, அமைச்சகங்கள், துறைகள், வெளியூர் அலுவலகங்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள துணை அலுவலகங்கள் மீது கவனம் செலுத்தும்.

பிரச்சாரம் வெற்றியடைய, துறைகள், அமைச்சகங்களின் தனிப்பட்ட ஈடுபாட்டை கோரி, இந்திய அரசாங்கத்தின் அனைத்து செயலாளர்களுக்கும், அமைச்சரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தூய்மை பிரச்சாரம் 2.0-ஐ தகுந்த முறையில் நடைமுறைப்படுத்த, அனைத்து செயலாளர்களும் தங்கள் அமைச்சகத்தின் கீழுள்ள, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply