நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு சதவீதம் அளவிற்கு உயரும் -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு சதவீதம் அளவிற்கு உயரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அடுத்த ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி இதே அளவிற்கு இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கியும் மதிப்பிட்டுள்ளதாக கூறினார்.முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இலவச திட்டங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்களுக்கான வாக்குறுதிகள் அளிக்கும்  அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply