அரசின் மின்னணு சந்தையை அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு.

அரசின் மின்னணு சந்தையை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

பல்வேறு விஷயங்களுடன், அரசின் மின்னணு வர்த்தகத்தின் செயல்பாடுகள், பொருட்களின் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் காலவரம்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் ’22 முதல் அரசு மின்னணு சந்தை மூலம் பணம் செலுத்தப்பட்டு, இணையதளம் வாயிலாகப் பூர்த்தி செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான நேரடி டெலிவரிகள் சரியான நேரத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் மின்னணு சந்தை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான பரிமாற்றங்களுக்கும் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுவது, தொடர் கண்காணிப்பின் வாயிலாக மேன்மை அடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், டெலிவரி காலக்கெடுவை மேலும் விரைவுப்படுத்துவதற்கும், அதற்கான அம்சங்களை சேர்ப்பதற்கும், அரசிடமிருந்து பொருட்களை வாங்குபவர்களின் விநியோக தேவைகளுக்கு ஏற்ப பொருட்களைத் தேர்வு செய்ய வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  முன்வைத்தார்.

குறு மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தைப் பெருக்கவும், உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அனைத்து பொது கொள்முதலையும் முற்றிலும் இணையதளம் மற்றும் வெளிப்படையான தளம், அதாவது அரசின் மின்னணு சந்தை தளத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply