கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள், உருவாக்குவதற்கு எஃகை வெட்டும் பணி துவக்கம்.

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களின் 6-வது மற்றும் 7-வது கப்பல்களை (பி.ஒய் 528 மற்றும் பி.ஒய் 529) உருவாக்குவதற்கு எஃகை வெட்டும் பணி ஆகஸ்ட் 30, 2022 அன்று தொடங்கப்பட்டது.

கப்பல் தயாரிப்பின் முக்கிய நிலையையும், கப்பல் கட்டுமானத்தின் துவக்கத்தையும் குறிப்பதால், எந்த ஒரு போர்க்கப்பலை உருவாக்குவதற்காகவும் எஃகை வெட்டுவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தில் உருவாக்கப்படும் இந்தக் கப்பல்கள் தற்சார்பு இந்தியாவிற்கு மாபெரும் ஊக்கசக்தியாக இருப்பதோடு, மேக் இன் இந்தியா என்ற நமது தேசிய இலக்கிற்கும் உத்வேகம் அளிக்கும்.

ஓர் சக்திவாய்ந்த நீர் மூழ்கி எதிர்ப்பு தளமாக விளங்குவதால், இந்தப் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையின் நீர் மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேலும் வலுப்படுத்துவதோடு கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும் நாட்டிற்கு சேவையாற்றும்.

திவாஹர்

Leave a Reply