பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி வோஸ்டாக் – 2022, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாட்டத்தின் பயிற்சி மைதானத்தில் இன்று தொங்டங்கி, செப்டம்பர் 7 வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி, பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
7/8 கோர்க்கா ரைஃபிள்ஸ் படையினர் அடங்கிய இந்திய ராணுவக் குழுவினர் பயிற்சி நடைபெறும் இடத்தை சென்றடைந்தனர். இவர்கள் அடுத்த 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் ஈடுபடுவர்.
இந்த பயிற்சியில், ராணுவ அம்சங்கள், சரி பார்க்கப்பட்ட செயல்முறைகளை நடைமுறைப்படுத்துதல், விவாதங்கள் மூலம் புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்திய ராணுவக் குழுவினர் எதிர்நோக்கியுள்ளனர்.
திவாஹர்