உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்: பாலியில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வலியுறுத்தல்.

இந்தோனேசியாவின் பாலியில் புதனன்று நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் இணை மாநாட்டில் (ஜிஇசிஎம்எம்) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார்.

G20 கூட்டத்தின் நிறைவு நாளில் பேசிய மத்திய அமைச்சர், உலகளவில் வலுவான மீட்பு மற்றும் பின்னடைவுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிகாட்டினார். நிலையான வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டத்தின் இதயமாக இருப்பது இதுதான் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

நிலையான மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்று திரு யாதவ் கூறினார். அவர் தனது உரையில், பருவ நிலை மாற்றம் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறிப்பாக, வளரும் நாடுகளில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், அதிகளவில் தாக்கத்திற்கு ஆளாகின்றனர் என்று வலியுறுத்தினார். இயற்கை வளங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது. பருவநிலை மாற்ற நிகழ்வு என்பது நியாயமற்றதாக உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பு செய்தவர்கள் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கும் என்று அமைச்சர் யாதவ் கூட்டத்தில் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு ஜி 20 உச்சிமாநாட்டின் உச்சக்கட்டத்தை எட்டும். இந்தோனேஷிய தலைமையின் கீழ், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் நேராக சென்று பார்வையிடும் நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிஓபி 26 –ல் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்கு புதிய மந்திரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply