2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி  முதல் ஜூலை  31ஆம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கும், 2021-22 ஆம் ஆண்டில் 8.68 கோடி நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய தரநிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி  அனைத்து தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் 43 ஆயிரத்து 153 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 1, 2022-ஆண்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 497 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதியில் தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த துறையில் நிகழ்ந்த சில சாதனைகள்:

1. நகை வியாபாரிகளுக்கான பதிவு இலவசமாக்கப்பட்டு, ஆயுட் காலத்திற்கு செல்லுபடியாகும்.

  • 2.  கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஹால்மார்க் தனித்துவ அடையாளத்தின் கீழ் ஹால் மார்க் இணையம் தொடங்கப்பட்டது. அந்த இணையம் மூலம் தங்க நகைகளுக்கான மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஆன்லைன் ஆக்கப்பட்டது.

3. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி 948 ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையத்திலிருந்து  2022ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி 1,220 மையமாக உயர்ந்துள்ளது.

4. ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்ட தங்க நகை ஆபரணங்களின் தரத்தை ‘verify HUID’’ என்ற செயலி மூலம் சோதனை செய்யும் நடைமுறை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி வந்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply