பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்களுக்கு சாதனை அளவாக ஸ்பார்ஷ் மூலம் டிஜிட்டல் முறையில் விநியோகம்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்,  ஓய்வூதியத்திற்கான  ரக்ஷா அல்லது ஸ்பார்ஷ் நிர்வாக முறையில் 2022 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்களுக்கு  ரூ.3,090 கோடிக்கும் அதிகமாக  விநியோகம்  செய்யப்பட்டுள்ளது. 2022 ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு மைல் கல்லாக  5,62,946 பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்கள்  வெற்றிகரமாக ஸ்பார்ஷ் டிஜிட்டல் இணையப்பக்கத்திற்கு மாறியுள்ளனர். ஸ்பார்ஷ் இணையப்பக்கத்தின் மொத்த ஓய்வூதியர் எண்ணிக்கை  ஒரு மி்ல்லியனைக் கடந்து  11 லட்சம் பயனாளிகளாக உள்ளது.  இது  இந்தியாவின் மொத்த பாதுகாப்பு ஓய்வூதியர்களில் சுமார் 33 சதவீதமாகும்.

ஸ்பார்ஷ் இணையப் பக்கத்தின் மூலம் 2020-21-ல் ஓய்வூதியர்களுக்கு  ரூ.57 கோடி விநியோகிக்கப்பட்ட நிலையில்,  2021-22 நிதியாண்டில், ரூ.11,600 கோடியாக விநியோகம் அதிகரித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply