2022-23 ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களில் தனியார் மற்றும் வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 58 சதவீதம் அதிகரித்துள்ளது என்று திட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல்-ஆகஸ்ட், 2022-23-ல் 43.93 மில்லியன் டன் அளவு நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தி அளவைவிட 57.74% அதிகமாகும். 2021-22ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 27.85 மில்லியன் டன் அளவு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.
2021-ல் ஏலம் விடப்பட்ட 2 சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்து 2022-23, ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் 2.36 மில்லியன் டன் இலக்கை உற்பத்தி செய்துள்ளன. தற்போது 37 தனியார் மற்றும் வணிக ரீதியிலான சுரங்கங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 11 புதிய சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய குறிப்பிடத்தக்க அளவு பங்களிக்கும்.
சுரங்க ஒதுக்கீட்டாளர்கள் நிலக்கரி உற்பத்தியில் அதிக வளர்ச்சியை அடைவதற்கான முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சகம், 2022-23 நிதியாண்டில், இந்த நிலக்கரி சுரங்கங்கள் 141.78 மில்லியன் டன் அளவு உற்பத்தியை எட்டும் என்று நம்புகிறது.
இந்த ஆய்வின்போது திட்ட சார்பாளர்கள் தங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும், எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று நிலக்கரி அமைச்சகம் உறுதி அளித்தது.
திவாஹர்