நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள அவர், ரியாத்தில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.அதிக வருவாய் ஈட்டும் நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

உலக அளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உள்ளதாகவும், நடப்பாண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.முன்னதாக இந்தியா – வளைகுடா ஒத்துழைப்பு குழுமம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எம்.பிரபாகரன்

Leave a Reply