பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின்கீழ் இந்தியா வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் நாட்டின் 75 வது விடுதலை பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கோவிட் தொற்று காலத்தில், பிரதமர் சிறப்பாக செயல்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான வலுவான அடித்தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
அனைத்து மாநிலங்களிலும் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
திவாஹர்