கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவிழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக மைசூர் சென்ற குடியரசுத் தலைவரை கர்நாடக மாநில ஆளுநர் திரு தவர்ச்சண்ட் கெஹலோட் மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் வரவேற்றனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply