பாதுகாப்புத்துறையில் தற்சார்பை அடைவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய அவர், எதிர்காலத்தில் இந்திய விமானப்படை உலகின் முதன்மையான படையாக திகழும் என்று கூறினார். அத்துடன் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நாடு முழு தற்சார்பை அடையும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இலகு ரக ஹெலிகாப்டரில் சிறிது நேரம் அவர் பயணித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா