மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறை, அக்டோபர் 2 முதல் 31 வரை ‘நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை’ மேற்கொண்டு வருகிறது. துறை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள இடங்கள், துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் 2 பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 17 இடங்களில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டாவது கட்ட நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சார தளத்தில் தூய்மை பணிகளுக்கு முன்பு/ பின்பு என 8 தொகுப்புகளில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 28000 சதுர அடி இடம் காலி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியதன் வாயிலாக ரூ. 23.5 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்